அறிவியல் சிறுகதைப் போட்டி

June 26th, 2008 | வகைகள்: தேன், அறிவுப்பு, போட்டி, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள், அறிவிப்பு | 37 மறுமொழிகள் » |

பதிவுலகம். விசித்திரம் நிறைந்த பல போட்டிகளை சந்தித்துள்ளது. புதுமையான படைப்புக்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த போட்டி விசித்திரமும் அல்ல போட்டி நடத்தும் நானும் புதுமையானவனல்ல. பதிவுப் பாதையிலே சர்வ சாதாரணமாக நடத்தப்படும் ஒரு போட்டிதான் இது. ‘இசங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம், கோஷ்டி சேர்த்து சண்டை போடுகிறோம்’ குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்வேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. இசங்களைப் பேசிக்கொண்டிருப்போம் இசங்கள் கூடாதென்பதற்காக அல்ல இசங்கள் கூடியிருக்க வேண்டுமென்பதற்காகத்தான்.
உனக்கேன் இந்த […]

Popularity: 40% [?]

முழுதும் படிக்க...


எடுத்தேன் கொடுத்தேன் 06/24/2008

June 24th, 2008 | வகைகள்: திரை விமர்சனம், அஞ்சலி, தேன், சமூகம், அமெரிக்கா, அலசல், நிகழ்வு, செய்தி விமர்சனம் | 15 மறுமொழிகள் » |

பாலபாரதியின் விடுபட்டவை போல ‘எடுத்தேன் கொடுத்தேன்’ அவ்வப்போது எழுதலாம் என எண்ணம். சில செய்திகளை சுருங்கச் சொல்லிச் செல்வதுதான் சிறப்பு. வலைப்பதிவுக்கு ஏற்றதொரு வடிவமும்கூட. எடுத்தேன் கொடுத்தேனை இப்படியும் வாசிக்கலாம் எடு தேன் கொடு தேன்.
தசாவதாரம் - II
இரண்டாம் முறையாக தசாவதாரம் பார்த்தேன். இதுவரை தசாவதாரத்திற்கான மொத்த செலவு $200 க்கருகில். இரண்டாம் முறை படம் முன்பை விட நன்றாக இருந்தது. இப்போது கமலின் முகத்தை தவிர்த்து படத்தில் மற்ற அம்சங்களில் கவனம் செல்கிறது. […]

Popularity: 21% [?]

முழுதும் படிக்க...


தசாவதாரமும் கமலின் சாபமும்

June 13th, 2008 | வகைகள்: திரை விமர்சனம், சினிமா, அலசல் | 30 மறுமொழிகள் » |

பழங்காலத்துக் கதைகளில் இரு சுவாரஸ்யமான விதயங்களைக் காணலாம். ஒன்று ஒருவரின் உயிர் ஏதோ ஒரு அபத்தமான பொருளில், ஆபத்தான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். ‘ஏழுகடல் தாண்டி ஒரு குட்டித் தீவில் சிறு குருவிக் கூட்டீல் இருந்த சங்கினுள் வசித்து வந்த குள்ள மனிதர்களிடமிருந்த பூத்தொட்டியில் வாழ்ந்த மண்புழு ஒன்றில் மன்னனின் உயிர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது…’. இன்னொன்று ஒருவரின் உருவம் மாறிவிடும்படி சாபம் கிடைக்கும். தவளையாகிவிட்ட இளவரசன், பறவையாகிவிட்ட இளவரசி, பாதி விலங்கும் பாதி மனிதனுமாக உருமாறித் திரிபவை […]

Popularity: 100% [?]

முழுதும் படிக்க...


பதில்கள்

June 12th, 2008 | வகைகள்: கேள்வி பதில் | 14 மறுமொழிகள் » |

http://tamilkuruthi.blogspot.com/ ஜேபி
1. ஓப் பக்கங்களை இன்னும் வாசிக்கிறீர்களா ?

ஓ! வாசிக்கிறேனே!
ஞானியின் வெளிப்படையான விமர்சன எழுத்து எனக்கு பிடிக்கும். அவரின் ஒவ்வொரு பத்தியிலும் ஏதேனும் சிறு அளவாவது எனக்கு கருத்து வேறுபாடு இருக்கும். விமர்சனமென்றாலே அவமதிப்பு எனும் சூழல் மாறவேண்டும். அப்படி ஒரு மாற்றம் ஞானி போன்றோரால் உருவாகலாம். குட்டவும் செய்கிறார் பூச்செண்டும் கொடுக்கிறார். ஊடகங்கள் இதைத்தான் செய்ய வேண்டும். குட்டப்படவேண்டியவர்களைக் குட்டவும் அவர்களே பாராட்டப்படவேண்டுமானால் பூச்செண்டு வழங்கவும் நடுநிலைமையோடு செய்வது அவசியம். விகடனைத் திறந்ததும் கற்றதும் பெற்றதையும் […]

Popularity: 22% [?]

முழுதும் படிக்க...


கேள்வி? பதில்!

June 10th, 2008 | வகைகள்: அறிவுப்பு | 12 மறுமொழிகள் » |

வலைப்பதிவுகளில் இது கேள்வி பதில் சீசன் போலிருக்குது. நாமும் களத்தில் குதிக்கலாம் என எண்ணிவிட்டேன். உங்கள் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு நகைச்சுவை பதிலும் ஒரு சீரியஸ் பதிலும் தரப்படும். மின்னஞ்சல் செய்ய விரும்புவோர் cyril. alex @ gmail . com எனும் முகவரிக்கு அனுப்பவும்.
Popularity: 32% [?]

Popularity: 32% [?]

முழுதும் படிக்க...


அமெரிக்கத் தேர்தல்

June 5th, 2008 | வகைகள்: அமெரிக்கா, அலசல் | 8 மறுமொழிகள் » |

அமெரிக்கத் தேர்தல் முறையின் வியத்தகும் அம்சம் உட்கட்சி ஜனநாயகம். அதிபர் தேர்தலில் தன் கட்சி சார்பில் போட்டியிடுபவரை ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் கட்சி உறுப்பினர்களும், பொதுமக்களும் தேர்வு செய்கிறார்கள். மிக நீண்டதும், அதிபர் பொதுத்தேர்தலைவிட ஆர்ப்பாடமும் குழப்பமும் மிகுந்ததாக உட்கட்சி தேர்தல்கள் அமைந்திருந்தாலும் மக்கள் பிரதிநித்துவம் எனும் ஜனநாயகக் கொள்கையை இயன்றவரை செயலாக்குவதற்கான ஒரு பெரும் முயற்சி என இதைக் காண முடிகிறது.
அமெரிக்கத் தேர்தலில் இரு பெரும் கட்சிகளான குடியரசுக் கட்சி (Republican Party) மற்றும் […]

Popularity: 24% [?]

முழுதும் படிக்க...


அமெரிக்கத் தேர்தல் களம்

May 23rd, 2008 | வகைகள்: புஷ், அமெரிக்கா, அலசல் | ஒரு மறுமொழி » |

இரண்டு பெரிய கட்சிகள். கட்டுக்கோப்பான உட்கட்சி ஜனநாயகம். பெரும்பாலும் இடதும் வலதுமான வாக்காளர்கள், நடுவில் சில கட்சி சார்பற்றவர்கள். முதல் பார்வையில் எளிதாகவும், சிக்கலற்றதாகவும் தெரியும் அமெரிக்கத் தேர்தல் களத்தின் மேல்திரையை விலக்கிப்பார்த்தால் அதன் குழப்பம் மிகுந்த நிலை உலகின் வேறு ஜனநாயகங்களிலிருந்து வேறுபட்டதல்ல என்பதை உணரலாம்.
அமெரிக்காவில் பல அரசியல் கட்சிகள் இருந்தும் குடியரசுக்கட்சி(Republican Party) மற்றும் ஜனநாயகக் கட்சி(Democratic Party) இரண்டும் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டவையாகவும் அமெரிக்க அரசியலை நிர்ணயிப்பவையுமாக உள்ளன.
பொதுவாகக் குடியரசுக் கட்சியை […]

Popularity: 24% [?]

முழுதும் படிக்க...


சற்றுபின்-தங்கிய நிலையில் சற்றுமுன்

May 23rd, 2008 | வகைகள்: அறிவுப்பு, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள் | 3 மறுமொழிகள் » |

என்னடா பதிவுகளில் சர்ச்சைகளெதுவுமில்லையே? ஞானி சொன்னதும் மக்களுக்கெல்லாம் ஞானம் வந்துவிட்டதா! என நினைத்தேன். இப்போது பிரியாணியாக இல்லையென்றாலும் பழைய சோறாகவேனும் ஒரு சின்ன சர்ச்சை வந்துள்ளது. (விவாதங்களையெல்லாமே சர்ச்சையாகத்தான் பார்க்கவேண்டும் எனும் பதிவுலக அளவையின்படி).
சற்றுமுன் தன்னார்வ சேவையா? என்கிற முக்கிய சந்தேகம் பாண்டிய மன்னனுக்கு வந்துள்ளது. அதை தீர்த்து வைக்க தருமி வரமாட்டார் அவர் சற்றுமுன்னில் இல்லை. சொக்கனும் வரமாட்டார். அவர் கிழக்கில் பிசி.
சற்றுமுன் துவங்கியதிலிருந்து ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் வந்து பங்களிக்கலாம் எனும் கொள்கையுடனேயே இருந்துவருகிறது. […]

Popularity: 33% [?]

முழுதும் படிக்க...


உறைந்து நிற்கும் காலம்

May 19th, 2008 | வகைகள்: அனுபவம், சிகாகோ, கட்டுரை, அமெரிக்கா | 5 மறுமொழிகள் » |

காலத்தை உறையச் செய்வது எப்படி? நேற்று சிகாகோவின் ஃபீல்ட் அருங்காட்சியகத்தில் இதற்கு விடைகிடைத்தது. 65மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு நிலையில் பூமியில் புதைந்த சூ(sue) எனும் டைனசோர், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாட்டையடிகளின் சத்தத்தினூடே எழுந்த உளிகளின் புலம்பலில் உருவாக்கப்பட்ட எகிப்திய கற்சவப்பெட்டிகள், சில நூறாண்டுகளுக்கு முன்புவரை நாகரீகங்களின் நிலைகள் என அங்கே காலம் உறை நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
65 மில்லியன் ஆண்டுகள் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. பிரபஞ்சத்தின் வயது 4.55 பில்லியன் வருடங்கள் […]

Popularity: 26% [?]

முழுதும் படிக்க...


Flippancy என்றால் என்ன? - ஓ பக்கங்களை முன்வைத்து

May 16th, 2008 | வகைகள்: கட்டுரை, இணையம், அலசல் | 22 மறுமொழிகள் » |

வலையுலகின் மீதான ஊடகங்கள், ஊடகவியலாளர்களின் பார்வைகள் பொத்தம் பொதுவாக வலைப்பதிவுகளின் சில எதிர்மறைக் கூறுகளை முன்வைத்தே அமைந்துள்ளன என எண்ணத்தோன்றுகிறது.
அரசு பதில், ஜூனியர் விகடன் ரிப்போர்ட் என வலைப்பதிவுகளில் சில நேரங்களில் பளிச்சென கண்ணுக்குத் தெரியும் கறைகளை மட்டுமே இவர்கள் கண்டுகொள்கிறார்கள். இப்படி இணையம் குறித்த எதிர்மறை கருத்துக்களை உருவாக்குவது மக்களிடம் ஒருவித ஆர்வத்தை தூண்டிவிடும் என்றே நினைக்கிறேன். என்னதான் எழுதுகிறார்கள் இணையத்தில் என மக்கள் தேட ஆரம்பிக்கலாம்.
ஞானி இந்த வார ஓ பக்கங்களில் இணைய எழுத்து […]

Popularity: 51% [?]

முழுதும் படிக்க...